Sunday, January 06, 2008

2 குருட்டு, ஆஸ்திரேலிய அடிவருடி அம்பயர்களும், 1 களவாணி கேப்டனும்

சிட்னியில் நடந்து முடிந்துள்ள 2வது டெஸ்ட் மேட்ச் பற்றித் தான் இப்பதிவு ! இதை எழுத ஆரம்பித்தபோது, இந்தியா டெஸ்டை டிரா செய்வதற்கு, 2 ஓவர்களும், கையில் 3 விக்கெட்டுகளும் இருந்த நிலையில், கிளார்க் வீசிய கடைசிக்கு முந்தைய ஓவரில், இந்திய அணி 5 பந்துகளில் 3 விக்கெட்டுகளையும் இழந்து ஓர் அசாதாரணமான தோல்வியைத் தழுவியது :(

டிவியில் பார்த்துக் கொண்டிருந்தே எனக்கே இத்தனை மனவருத்தம் என்றால், ஒரு போராளியைப் போல மிக்க மன உறுதியுடன், ஆஸ்திரேலிய பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு 45 ரன்கள் (112 பந்துகளில்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த நமது அணியில் கேப்டன் கும்ப்ளேயின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது! Kumble looked absolutely disconsolate after the completely unexpected defeat :(

இந்த ஆட்டத்தில், இந்தியத் தரப்பில் 11 ஆட்டக்காரர்களும், ஆஸ்திரேலியத் தரப்பில் 13 ஆட்டக்காரர்களும் விளையாடியதால் தான் நாம் தோற்றோம் என்பது குறிப்பிட வேண்டியது!!!!! ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 150+ ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்த நிலையில், (வயதானதால் ஓய்வெடுக்க வேண்டிய காலத்தில் உள்ள!) குருட்டு அம்பயர் ஸ்டீவ் பக்னர், 30 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த சைமண்ட்ஸை (அவர் அவுட் என்பதில் பக்னரைத் தவிர்த்து வேறு யாருக்குமே சந்தேகமில்லாச் சூழலில்!) அவுட் தர மறுத்து, அவருக்கு மறுவாழ்வு வழங்கியதில், சைமண்ட்ஸ் சுதாரித்துக் கொண்டு 162 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியா 463 ரன்கள் எடுக்க உதவினார்!

அது போலவே, சைமண்ட்ஸ¤க்கு (அவர் எழுபதுகளில் இருந்தபோது) எதிரான stumping appeal-ஐ நிராகரித்ததோடு, அதை மூன்றாவது அம்பயரிடம் பரிந்துரைக்கவும் திமிர் பிடித்த பக்னர் ஒப்பவில்லை! அதற்கு முன் ரிக்கி பாண்டிங் கங்குலியின் பந்து வீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்தபோது, இன்னொரு கள அம்பயரான பென்சன் இந்திய அணியின் அப்பீலை நிராகரித்தார். அந்த அடிவருடி பென்சனிடம் பரிதாபமாகக் கெஞ்சிய நமது அணியினரைப் பார்க்கவே பாவமாக இருந்தது :(

இறுதி நாளான இன்று, 72 ஓவர்களில் 333 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்து ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தது. இந்தியாவின் முதல் இன்னிங்க்ஸ் ஹீரோக்களான சச்சினும், லஷ்மணும் சோபிக்கவில்லை ! குருட்டு பக்னர் ரூபத்தில் விதி மீண்டும் விளையாடியது. நன்றாக ஆடிக் கொண்டிருந்த டிராவிட்டுக்கு அநியாய அவுட் கொடுத்தார் பக்னர், பந்துக்கும் மட்டைக்கும் ஒரு மைல் இடைவெளி இருந்தபோதும்!

அம்பயர் பென்சன், தன் பங்குக்கு, கிளார்க்கின் "தரையில் பட்டு எடுத்த" கேட்ச்சுக்கு (சக கள அம்பயரிடமும் ஆலோசனை செய்யாமல், மூன்றாவது அம்பயரிடமும் செல்லாமல்!) மிகச் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கங்குலிக்கு (51 ரன்கள்) அவுட் கொடுத்து அவரை பெவிலியனுக்கு அனுப்பியது, அக்கிரமம் ... இதில் கொடுமை (அல்லது காமெடி!) என்னவென்றால், பாண்டிங், கிளார்க் ஆகிய இருவரின் கூற்றை ஏற்று பென்சன், கங்குலியை அவுட் என்று நிர்ணயம் செய்தது தான்!

பாண்டிங் ஒரு களவாணி என்பது உலகப் பிரசித்தம், மேலும், இந்தக் காலத்தில், எந்தத் திருடன் தான் திருடியதை ஒப்புக் கொள்வான் ???? எல்லாரும் GR விஸ்வநாத் போல இருந்து விடுவார்களா என்ன ? வருங்கால கேப்டனாக வர்ணிக்கப்படும் கிளார்க், பாண்டிங் போலவே "நல்ல" நடத்தை உடையவராகத் தெரிவதால், எதிர்காலத்திலும் ஆஸ்திரேலிய அணி திருந்துவதற்கு வாய்ப்பில்லை என்பது தெளிவு !!!! ஆட்ட வர்ணனை செய்து கொண்டிருந்த கவாஸ்கர், பாண்டிங்கையும் பென்சனையும் பிடித்து விளாசி விட்டார், என்ன பயன் சொல்லுங்கள் ?

கள அம்பயர்கள், சந்தேகம் எழும்போது, நிச்சயம் தொழில்நுட்பத்தின் (3வது அம்பயர் மூலம்) உதவியை நாட வேண்டும். ஆட்டக்காரர்கள் போலவே, அம்பயர்களுக்கும் (அவர்களது) தவறுகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். பக்னர், பென்சன் என்ற 2 கூறு கெட்ட அம்பயர்களும், ஒரு நல்ல டெஸ்ட் மேட்ச்சை பாழாக்கி, (மன உறுதியுடன் விளையாடிய) இந்திய அணி அநியாயமாக, கடைசி நிமிடத் தோல்வி அடைவதற்கு வழி வகுத்தனர் என்றால் அது மிகையில்லை :(

ரெண்டு அம்பயரும் ஆஸ்திரேலியா கிட்ட காசு வாங்கிட்டாங்களோ, என்ன இழவோ ???? அனில் கும்ப்ளேயை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது ... You simply can not and should not allow 2 incompetent idiots to spoil (in the name of umpiring) a grand show watched by millions of spectators and that is the moral of this sordid story :(

Anyway, Hats off to Kumble and the team for a great fightback !!!

மிகுந்த கடுப்புடன்
எ.அ.பாலா

15 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test :(

Naufal MQ said...

//கள அம்பயர்கள், சந்தேகம் எழும்போது, நிச்சயம் தொழில்நுட்பத்தின் (3வது அம்பயர் மூலம்) உதவியை நாட வேண்டும். //

அவர் மட்டும் ஒழுங்கா?? போங்க சார், நீங்க வேற. :(

enRenRum-anbudan.BALA said...

Thanks, Fast bowler !

said...

கும்ளே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஒரு வரி கூறினார் - கேட்டீர்களா? "There is only one team that played with the spirit of the game!" என்று. செருப்பால் அடித்தது போல இருந்தது.
A fighter to the core!

ஓகை said...

ஆஸ்திராலியர்களும் நடுவர்களும் செய்தது உச்சகட்ட அநாகரீகம். ஸ்டீவ் பக்னர் பல போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக செயலாற்றி இருந்தபோதும் எப்படி அவர் நடுவராகத் தொடர்கிறார்?

வந்தியத்தேவன் said...

கங்குலியின் தவ்றான அவுட்டின் போது திமிர் பிடித்த பொண்டிங் தானும் விரலை உயர்த்தி அவுட்காட்டியது கிரிக்கெட்டை கேலிக்கூத்தாக்கியது. இந்திய அணியைத் குறைசொல்லும் அளவுக்கு இந்த மேட்சில் அவர்கள் விளையாடவில்லை. ஸ்ரிவ் பக்கனரை எல்லாம் ஏன் நடுநிலை நடுவராக வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

அவுஸ்திரேலியாவின் திமிருக்கு நிச்சயம் ஏதோ ஒரு அணி ஒரு நாள் பழிதீர்க்கும்.

Sridhar V said...

தலைப்பு மிகவும் அருமை :-)).

கும்ப்ளேயின் மன வருத்தம் புரிந்து கொள்ளக்கூடியதுதான்.

பாண்டிங் இந்த பந்தயத்தில் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார். :-(

மஞ்சூர் ராசா said...

பாலாவுக்கே இவ்வளவு கோபமும் வேதனையும் ஏற்பட்டிருக்கிறது என்றால் கும்ப்ளே மற்றும் மற்ற வீரர்களின் நிலைமையை நினைத்தால்....

said...

Can one some tell BCCI that you have the power now. Act quickly and get the team out of Australia

enRenRum-anbudan.BALA said...

அனானி,
நன்றி.
//செருப்பால் அடித்தது போல இருந்தது.
//
செருப்பால அடிச்சாலும், அதுங்களுக்கு புத்தி வருவதற்கு வாய்ப்பில்லை !!!

ஓகை,
வாங்க,
//
பக்னர் பல போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக செயலாற்றி இருந்தபோதும் எப்படி அவர் நடுவராகத் தொடர்கிறார்?
//
எல்லாம் அரசியல் தான், பக்னருக்கு ஆதரவான ஆட்கள் ICC-யில் இருக்கிறார்கள் :(

எ.அ.பாலா

இலவசக்கொத்தனார் said...

பாலா, இதனைப் பற்றி பாண்டிங்கிடம் கேள்வி கேட்டு சலசலப்பை உண்டாக்கிய நிருபர் ராஜாராமனின் பதிவு இது.

http://rajreflects.blogspot.com/2008/01/losing-respect-and-getting-under.html

enRenRum-anbudan.BALA said...

Sridhar நாராயணன்,
நிஜமாகவே, ஆட்டத்தின் முடிவில் கும்ப்ளேயை பார்க்க பரிதாபமாக இருந்தது :(

மஞ்சூர் ராசா,
நேற்று எனக்கு ரத்தக் கொதிப்பே வந்து விட்டது !!!

அனானி,
அர்பஜன் சிங்கின் மீதான தடையை ரத்து செய்யாவிட்டால், இந்திய அணி திரும்பி வருவது தான் சரியான முடிவாக இருக்கும் !

கொத்ஸ்,
வாங்க, நன்றி.

சீனு said...

வழக்கமாகவே ஆவுஸ்திரேலியர்கள் மரியாதை தெரியாதவர்கள். ஆவுஸ்திரேலிய வீரர்கள்(?) அனைவரும் country-side-ல் இருந்து வந்தவர்கள். அவர்களாவது நேர்மையாக இருப்பதாவது?

இவர்களுக்கு செருப்படி கொடுக்கவேண்டும் என்றால் அர்ஜுன ரனதுங்க வழி தான் சரி. மானங்கெட்டவர்கள். கிரிக்கெட்டில் நிறவெறி அதிகமாகிவிட்டது. இதற்கு பாடுபட்டவர்கள் ஆவுஸ்திரேலியர்கள்...

enRenRum-anbudan.BALA said...

சீனு,
வாங்க, நன்றி.

enRenRum-anbudan.BALA said...

வந்தியத்தேவன்,
கருத்துக்கு நன்றி.

//அவுஸ்திரேலியாவின் திமிருக்கு நிச்சயம் ஏதோ ஒரு அணி ஒரு நாள் பழிதீர்க்கும்.
//
விரைவில் அந்த நாள் வரும் என்று நம்புவோம் !!!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails